ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் விரைவில் திறப்பு - நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் ஆய்வு

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் விரைவில் திறப்பு - நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் , பஞ்சப்பூரில் 40.60 ஏக்கரில் பிரமாண்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம், பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் ரூ.243.78 கோடியிலும், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளும் பணி ரூ.106.20 கோடியிலும் என மொத்தம் ரூ.349.98 கோடி செலவில் பஞ்சப்பூர் பெருந்திட்டப் பணிகளுக்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப்பணிகளை நகராட்சி நிருவாகத்துறை இயக்குனர் சு.சிவராசு, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த அவர், அதுகுறித்த விவரங்களை மாநகராட்சி அலுவலர் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார். 

இந்த ஆய்வின் போது ஆணையர் இரா.வைத்திநாதன், நகரப்பொறியாளர் பி.சிவபாதம், செயற்பொறியாளர் கே.எஸ்.பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் ச.நா.சண்முகம், உதவி செயற்பொறியாளர் த.வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision