26 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ஸ்ரீதேவி மங்களம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (60). இவர் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் நடைப்பெற்ற உறவினரின் திருமணத்திற்காக தந்தையும் மகனும் சென்றுள்ளனர். இவருடைய மனைவி 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார்.
திருமணத்தை முடித்துவிட்டு நேராக அவர்களுடைய விவசாய நிலத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் மாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கேட் மற்றும் கதவுகளை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 26 1/2 பவுன் நகை, ரூபாய் 2 லட்சம் ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் வங்கி ஆவணங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதன் மதிப்பு 6 லட்சத்திற்கு மேல் இருக்கும். இதுகுறித்து சிறுகனூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சிறுகனூர் போலீசார் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். திருட்டு சம்பவம் குறித்து செல்வராஜ் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO