திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம்.

தென்கயிலாயம் எனப்போற்றப்படுவதும், 274 சைவத் தலங்களுக்குள் ஈடு இணையற்றதாகவும் சிறப்புபெற்ற, திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும், சித்திரை திருத்தேரோட்டவிழா கடந்த (25.04.2023)ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினசரி ஒவ்வொரு அலங்காரத்தில் அம்பாளும், தாயுமானவர் (சிவபெருமானும்) காமதேனு, ரிஷபம், யானை, தங்ககுதிரை, நந்திகேசர், கைலாசபர்வதம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வந்தனர். 

தொடர்ந்து (29.04.2023)ம் தேதி செட்டிப்பெண் பிரசவம் பார்த்தல் வைபவமும், (30.04.2023)ம் தேதியன்று திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடைபெற்று பக்தர்களுக்கு காட்சியளித்துவந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று (03.05.2023) நடைபெற்றது, மலைக்கோட்டை தாயுமானசுவாமி, அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய திருத்தேரில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மற்றொரு தேரில் மட்டுவார் குலழம்மை தாயார் வீற்றிருந்தனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு தேரைவடம்பிடித்து இழுத்துச்சென்றனர். நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்து பின்னர் தாயுமானவர் சன்னதிக்குச் சென்றடைவார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் கண்டனர்.

விழாவையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் உதவி ஆணையர் உள்ளிட்ட பணியாளர்கள் மேற்கொண்டிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn