கலப்பட எண்ணெய் நிறுவனத்திற்கு பூட்டு

கலப்பட எண்ணெய் நிறுவனத்திற்கு பூட்டு

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R. ரமேஷ்பாபு ஆய்வு செய்தார்.

அந்த ஆய்வில் Refined sunflower oil என்ற பெயரில் Sunflower oil ஐ பயன்படுத்தாமல் பாமாயிலை வைத்து தயாரிக்கப்பட்ட சுமார் 5000 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டு, சட்ட பூர்வ உணவு மாதிரியும் எடுக்கப்பட்டு அந்த நிறுவனதின்  உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R. ரமேஷ்பாபு கூறுகையில்.... திருச்சி மாவட்டத்தில் சமையல் எண்ணெய் தயாரிப்பாளர்கள் மற்றும் சில்லறை விற்பனை செய்பவர்கள் சமையல் எண்ணையில் கலப்படம் செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வசந்த், மாரியப்பன், ஸ்டாலின் மற்றும் முத்துராஜா ஆகியோர் உடன் இருந்தனர். இதுபோன்ற உணவு சம்பந்தப்பட்ட புகார்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட எண்களை தொடர்பு கொள்ளவும்

புகார் எண் : 99 44 95 95 95 / 95 85 95 95 95

மாநில புகார் எண் : 9444042322

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu