ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி.. சென்னையில் இன்று தொடக்கம்-நேரடி ஒளிபரப்பு

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி.. சென்னையில் இன்று தொடக்கம்-நேரடி ஒளிபரப்பு

7 வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் டிராபி" 2023 ஆகஸ்டு 3-ம் தேதி முதல் 12ம் தேதி வரை சென்னையில் தடைபெறவுள்ளது. இப்போட்டியை, ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புகழ்பெற்ற ஹாக்கிப் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெறுகிறது. இந்தியா, சீன. பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய

6 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்க உள்ளன. 2023 ஏப்ரல் 17-ம் தேதி சென்னை ராடிசன் ஹோட்டவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிய ஆடவர்ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023 போட்டியினை சென்னையில் நடத்துவது தொடர்பாக அறிவிப்பை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துரை அனமச்சர் உதயநிதி ஸ்டாவின் வெளியிட்டார்.

 ஆசிய ஆடவர் ஹாக்கி சாப்பியன்ஷிப் 2023 கோப்பை "பாஸ் தி பால்" என்ற தலைப்பில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் வழியாக 2025 ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்டு 1-ம் தேதி வரை மாவட்டம் தோறும் காட்சிப்படுத்தப்பட்டது.

தற்போது 7 வதுஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் டிராபி 2023 ஆகஸ்டு -12ம் வரை சென்னையில் பின்னரும் நாட்களில் கீழ்கண்ட அட்டவணைப்படிநடைபெறவுள்ளது.

7ஆவது ஆசிய ஹாக்கிபோட்டிகள் இன்று(03.08.2023) தொடங்கி (12.8.2023)வரை நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி திரையின் மூலம் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.இன்று மாலை 4 மணிக்கு முதல் போட்டியும் 6:30 மணிக்கு இரண்டாவது போட்டியும் 8.30 மணிக்கு மூன்றாவது போட்டியும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn