தியாகி இம்மானுவேல் சேகரினின் ஆண்டு நினைவு நாள் - திருச்சியில் அமைச்சர்கள் மரியாதை

தியாகி இம்மானுவேல் சேகரினின் ஆண்டு நினைவு நாள் - திருச்சியில் அமைச்சர்கள் மரியாதை

திருச்சியில் தியாகி இம்மானுவேல் சேகரின் 66 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், இளங்கோ, போட்டோ கமால், கனகராஜ், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, டோல்கேட் சுப்பிரமணி பொதுக்குழு உறுப்பினர் செவந்திலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் கலைச்செல்வி, டி.ஆர் பாலசுப்ரமணியன், புஷ்பராஜ், தனசேகர், காதர், கருணாமூர்த்தி, வழக்கறிஞர்கள் அந்தோணி ராஜ், கவியரசன், மணிபாரதி, கருத்து கதிரேசன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தியாகி இமானுவேல் சேகரின் திருவுருவப்படத்திற்கு பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்.

இதே போல் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அலுவலகத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் இமானுவேல் சேகரன் உருவபடத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .

நிகழ்வில் திருச்சி மாநகர செயலாளர் மதிவாணன் மற்றும் மாவட்ட - மாநகர நிர்வாகிகள், சேகரன் - வண்ணை அரங்கநாதன், கோவிந்தராஜன், லீலாவேலு, மூக்கன், நீலமேகம், ஜெகதீசன், சிந்துஜா, தனசேகரன் பழனியாண்டி, முத்தமிழ் கருணாநிதி, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision