திருச்சியில் ஏடிஎம் மிஷின் கதவு திறப்பு அலாரம் ஒலிப்பு - போலீசார் குவிப்பு
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் அருகில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இரவு 10.30 மணிக்கு 2 பேர் பணம் எடுக்க உள்ளே நுழைந்துள்ளனர். அவர்கள் பணத்தை எடுத்து செல்லும் பொழுது திடீரென இயந்திரத்தில் பணம் வைக்கப்பட்டுள்ள கதவு தானாக திறந்தால், எச்சரிக்கை மணி அடித்தது. இருவரும் பயந்து எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் அந்த ஏடிஎம் மையத்திற்கு காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். பின்னர்
ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது பணம் வைக்கப்பட்ட கதவு தானாக திறந்தது தெரியவந்தது.
திருச்சி மாநகர துணை ஆணையர் ஶ்ரீதேவி, உதவி ஆணையர் அஜய் தங்கம் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வங்கி ஊழியர்கள் ஏடிஎமில் பணம் நிரப்பிய போது ஏற்பட்ட அலட்சியத்தால் இந்த விபரீத சம்பவம் நடந்தாக தெரியவந்துள்ளது.
மேலும் அந்த ஏடிஎம் மையத்திற்கு வெளியே பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த கணவன் மனைவியிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. சனி, ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் வங்கி ஊழியர்கள் அஜகரதையால் நடந்து கொண்டதால் இந்த விபரீதம் ஏற்பட்டது. மேலும் அங்கு பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால் பல லட்சம் ரூபாய் தப்பியது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO