வங்கியில் பணம் எடுத்துச் செல்வோரை கண்காணித்து வழிப்பறி செய்த நபரை கைது செய்து ரூ.4,80,000 பணம் மீட்பு

வங்கியில் பணம் எடுத்துச் செல்வோரை கண்காணித்து வழிப்பறி செய்த  நபரை கைது செய்து ரூ.4,80,000 பணம் மீட்பு

கடந்த 02.05.22-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லையில் தனியார் வங்கியிலிருந்து பணம் ரூ.2,50,000/- எடுத்து வந்த ஒருவரிடம் பணத்தை வழிப்பறி செய்ததாக கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் புலன் விசாரணை செய்து எதிரியை தேடி வந்தனர்.

இந்நிலையில், அதேபோல் கடந்த 22.06.22-ந்தேதி ஸ்ரீரங்கம் தனியார் வங்கியிலிருந்து நகையை அடகு வைத்து பணம் ரூ.1,50,000/- எடுத்து வந்த பெண்ணிடம் பணத்தை வழிப்பறி செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று 23.06.22-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல்நிலை கொள்ளிட கரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரிடம் கத்தியை காண்பித்து பணம் மற்றும் செல்போன் வழிப்பறி செய்ததாக கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டும் இது தொடர்பாக சாந்தனு என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் மேற்படி வழிப்பறி சம்பவங்களையும்,

கண்டோன்மெண்ட் மற்றும் அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தான் திருடியதாக ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடமிருந்து வழக்கின் சொத்தான பணம் ரூ.4,80,000/-, ஒரு செல்போன் ஆகியவை மீட்கபட்டும் எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேற்படி வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை செய்து எதிரியை கைது செய்த ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார். மேலும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO