மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெற வாழ்நாள் சான்று ஆகஸ்ட் 31 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் - ஆட்சியர் தகவல்
வாழ்நாள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 40% அதற்கும் மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், நாட்பட்ட நரம்பியல் குறைபாடுகள் மற்றும் 75 சதவீதம் அதற்கு மேல் மிக கடுமையாக பாதிக்கப் பட்ட பல்வகை மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூபாய் 1500 வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூபாய் 1500 பெற்று பயனடைந்து வரும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் இதுநாள்வரையில் இவ்வாண்டிற்கு வாழ்நாள் சான்றினை சமர்ப்பிக்கப் படாதவர்கள் திருச்சிராப்பள்ளி கண்டோன்மெண்ட் மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து வாழ்நாள் சான்று படிவம் பெற்று கொள்ளலாம்.
https:// tiruchirappalli.nic.in/ என்ற இணையதளத்தின் வழியாக வாழ்நாள் சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கிராம நிர்வாக அலுவலர் அல்லது அரசிதழ் பதிவு பெற்ற(GAZETTED OFFICER) அலுவலரிடம் இருந்து யாரேனும் ஒருவரிடம் கையொப்பம் பெற்று விண்ணப்பத்தில் சுட்டிகாட்டியுள்ளபடி தேவையான உரிய சான்றுகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைத்து விடவும்.
மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தின் மூலமாக மாதாந்திர உதவித் தொகை ரூபாய் 1000 பெரும் மாற்றுத்திறனாளிகள் சான்று சமர்ப்பிக்க தேவையில்லை எனவும் மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 0431- 241 2590 தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS