அதிமுக தோல்விக்கு இரட்டைத் தலைமையோ, இரட்டை இலையோ இல்லை - திருச்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி

அதிமுக தோல்விக்கு இரட்டைத் தலைமையோ, இரட்டை இலையோ இல்லை - திருச்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மாநில தலைவர் ஜிகே வாசன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன்... தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறுகிறது.

வெற்றி, தோல்வி என்பது சகஜமான ஒன்று ஏற்புடையது நமக்கும் பொருந்தும். பல்வேறு காரணங்களால் தேர்தலில் வெல்ல முடியவில்லை. தற்போது இயக்கத்திற்கு புத்துணர்வு கொடுக்க வேண்டும் என்பதற்கு என் சுற்று பயணம் தொடர்கிறது. கொரோனா விழிப்புணர்வு நாளாக காமராஜர் பிறந்த நாளை த.மா.க கொண்டாட உள்ளது. 12 தொகுதிகள் கேட்டோம், கிடைக்கவில்லை சைக்கிள் சின்னம் கேட்டோம் கிடைக்கவில்லை.

சட்ட சிக்கல் தொடர்கிறது. தமகாவின் நிலை கூட்டணி தர்மத்திற்கு ஏற்று செல்ல வேண்டும். தமகவுக்கும், எனக்கும் எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. உள்ளாட்சியில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். சட்டமன்றத் தேர்தல் முடிவிற்கு பிறகு எந்த கட்சியும் வெளியே வரவில்லை. எனவே உள்ளாட்சி தேர்தல் வரும் போது கூட்டணி தெரிவிக்கப்படும்.

அதிமுக தோல்விக்கு இரட்டைத் தலைமை ,
இரட்டை இலையும் இல்லை. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் நான் பேசுவேன். மேலும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் பொருட்களின் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் வரிகளை குறைக்கலாம். கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகுவது அவர்கள் தனிப்பட்ட முடிவு. இது இளைஞர்களுக்கு வழிவிடுவது போல் இருக்கும்.

தமிழகத்திற்கு உரிய தடுப்பூசி வழங்க வேண்டும். இந்திய முழுவதும் தங்கு தடையின்றி தாமதமின்றி 100 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்க  வேண்டும். மேகதாது அணை கட்டக்கூடாது. மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும். தமிழக அரசு அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS