ஸ்ரீரங்கத்தில் கட்டிடத் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

ஸ்ரீரங்கத்தில் கட்டிடத் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலை மாநகராட்சி குடிநீரேற்றும் நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியில் ஈடுபட்ட கட்டிடத் தொழிலாளி, திருச்சி திருவானைக்காவல் நடு கொண்டையம்பேட்டையை சேர்ந்த கணபதி (19) என்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மேலும், அவருடன் பணிபுரிந்த முருகானந்தம் என்பவர் மின்சாரம் தாக்கி பாதிப்புக்குள்ளான நிலையில், ஸ்ரீரங்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக திருச்சி பஞ்சக்கரை சாலையில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சென்ற செல்வம் என்ற ஒப்பந்த தொழிலாளி, மண் சரிவில் சிக்கி, 2 மணி நேர் போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision