திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது வேன் மோதி விபத்து - 11 பேர் படுகாயம்

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது வேன் மோதி விபத்து - 11 பேர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு பெண் பார்ப்பதற்காக கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் இருந்து ஒரு குடும்பத்தினர் தனது உறவினர்களுடன் வாடகை வேனில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

அந்த வேனை காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த பாலசுந்தரம் (34) என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நகர் என்ற பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே திசையில் இரண்டு சாலைகளுக்கு நடுவே உள்ள பூச்செடிகளுக்கு லாரி மூலம் தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

வேன் எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது வேகமாக மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த டிரைவர் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான வேனை கிரேன் எந்திரத்தின் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்த லால்குடி போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்றி அஜாக்கரதையாக தண்ணீர் லாரியை நிறுத்தி பணியில் ஈடுபட்ட தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision