திருச்சியில் 20 நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மும்மடங்கு உயர்வு

திருச்சியில் 20 நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மும்மடங்கு உயர்வு

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120-ஐ தொட்டுள்ளது. இம்மாதத்தின் தொடக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை 47 ஆக இருந்து வந்த நிலையில் கடந்த 20 நாட்களில் திடீர் என மும்மடங்காக அதிகரித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்காமல் தவிர்க்க திருச்சி மாநகராட்சி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அளித்துள்ள அறிக்கையின் படி, அபிஷேகபுரம் மற்றும் பொன்மலைப் பகுதிகளில் அதிக அளவு தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட இரு பகுதிகளிலும் சம அளவிலே பாதிப்பு எண்ணிக்கை 30ஆக உள்ளது. மற்ற பகுதிகள் எல்லாம் ஒற்றை இலக்கிலேயே   பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது .
பாதிப்புக்குள்ளான 70 நபர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து கொரனா தொற்று அதிகரித்து வரும் நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக திருச்சி நகர் முழுவதும் காய்ச்சல் முகாம்கள்  தொடர்ந்து நடைபெறும். திருச்சி மாநகராட்சி காய்ச்சல் முகாம்களை  மார்ச் 27-ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி பொதுமக்கள் சமுக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி வலியுறுத்தி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU