திருச்சி மாநகராட்சிக்கு திடீர் விசிட் அடித்த சி.எம் -அதிகாரிகள் அதிர்ச்சி

திருச்சி மாநகராட்சிக்கு திடீர் விசிட் அடித்த சி.எம் -அதிகாரிகள் அதிர்ச்சி

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக கழக வெளியீட்டு செயலாளர் செல்வேந்திரனை அவருடைய உறையூர் இல்லத்திற்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார்.

பின்னர் சுற்றுலா மாளிகைக்கு செல்லும் வழியில் மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு திடீரென சென்றார். அங்கு மாநகராட்சி  ஆணையர் இருக்கைக்கு சென்றார். முதல்வரை பார்த்ததும் அதிகரிகள் பரபரப்படைந்தனர். அப்போது அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுக்க காத்திருந்த மக்களை ஒவ்வொருவராக அழைத்து மனுக்களை பெற்றார்.

சிலரிடம் என்ன குறைகள் என கேட்டறிந்தார். தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் மற்றும் அதிகாரிகளிடமும் ஒவ்வொரு கோப்புகளையும் கேட்டு பெற்று விசாரித்தார். சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக அங்கு ஆய்வு நடத்தினார்.

திடீரென முதல்வர் அங்கு வந்ததும் மாநகராட்சி அலுவலக பகுதிகளில் மக்கள் பெருமளவில் திரண்டனர். முதலமைச்சருடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவும் உடனிருந்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO