170 கிலோ குட்கா பதுக்கியவர் கைது

170 கிலோ குட்கா பதுக்கியவர் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி,  அறிவுரைப்படி திருச்சி மாநகரில் உள்ள பெட்டிகடைகள், டீ கடைகள் மற்றும் கூல்டிரிங்ஸ் கடைகளில் (குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி அருகில் உள்ள கடைகள்) குட்கா, புகையிலை, ஹான்ஸ், கூல்லிப், விமல், பான் மசாலா போன்ற இளைஞர்களின் எதிர்காலத்தை கெடுக்கும் போதை பொருட்களை விற்பனை செய்வோர் மீது காவல் துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அதன்படி, இன்று(18.11.23)-ந் தேதி அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வயலூர் ரோடு சண்முகா நகர் சந்திப்பு அருகில் வாகன தணிக்கையில் செய்தபோது சந்தேகம்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்தராம் வயது 38, த.பெ.நடராஜன் என்பவரால் கொண்டு வரப்பட்ட 3 மூட்டைகளை சோதனை செய்ய அதில் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்களை கைபற்றியும், பின்னர் எதிரியின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அவரது வீட்டில் சோதனை செய்து அங்கிருந்த ஹான்ஸ் - 85 கிலோ, விமல்-47 கிலோ, கூல்லிப் -25 கிலோ, வி ஒன் டொபாக்கோ- 10 கிலோ மற்றும் RMD பான்மசாலா-3 கிலோ ना भाले रू.1,85,000/- மதிப்புள்ள, 37 மூட்டைகளில் இருந்த 170 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தும், வழக்குப்பதிவு செய்தும், குட்கா பொருள்களை கடத்த பயன்படுத்திய TN 48 BJ 6496- TVS XL என்ற இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும், எதிரியை கைது செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேலும் திருச்சி மாநகரத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா பொருள்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision