அரசு பள்ளி மாணவர்களுக்கு பிளாஸ்டிக் அல்லாத தண்ணீர் பாட்டில் வழங்கிய முத்தூட் குழுமம்
திருச்சி - திருவெறும்பூர்-யில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பகவதிபுரம் அரசு பள்ளி குழந்தைகளுக்கு முத்தூட் குழுமம் சார்பாக பிளாஸ்டிக் அல்லாத தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. பொதுவாக பள்ளி குழந்தைகள் பிளாஸ்டிக் பாட்டில் உபயோக படுத்துவதால் அதனை முற்றிலும் மாற்றும் விதமாக 160 மாணவ , மாணவிகளுக்கு இந்த ஸ்டீல் பாட்டில்கள் வழங்கப்பட்டது.
இதில் முத்தூட் குழுமத்தின் திருச்சி மண்டல மேலாளர் கே பி சுவாமிநாதன் தலைமையில். பள்ளி தலைமை ஆசிரியர் அலமேலுமங்கை முன்னிலையில் நடைபெற்றது இதில் நிர்வாக மேலாளர் அசோக் குமார் , மார்க்கெட்டிங் மேலாளர் சதிஸ் , கிளை மேலாளர் மைதிலி ,சே.முத்துக்குமார் , மா.மணிகன்டன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் , இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO