கல்லூரி இணை இயக்குநா் அலுவலக   உதவியாளருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை -சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

கல்லூரி  இணை இயக்குநா் அலுவலக   உதவியாளருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை -சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

தஞ்சாவூர் மாவட்டம், உள்ள அ. வீரைய்யா வாண்டையார் நினைவு  புஷ்பம் கல்லூரி (தன்னாட்சி)யில் இயற்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வந்த சக்திவேல் என்பவருக்கு அவரது பதவி உயர்வுக்குரிய 19 மாதங்களுக்கான நிலுவைத்தொகையை வழங்க, ரூ.2,000/-ம் தொடர்பாக கல்லூரி இணை இயக்குநர் அலுவலக உதவியாளர் வேணுகோபால் என்பவர் மீது ஊழல் தடுப்பு காவல் தடுப்புச்சட்டம் - 1988ன்படி (18.01.2012)ம் தேதி குற்ற பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து மேற்கொண்ட பொறிவைப்பு நடவடிக்கையில், புகார்தாரர் சக்திவேல் என்பவரிடம் கையூட்டு பணம் ரூ.2,000/-த்தை பெற்ற வேணுகோபால் திருச்சி ஒழிப்பு போலீசாரால் செய்யப்பட்டார். மேற்படி வழக்கானது விசாரணை இன்று (17.03.2023) திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன்,

முன்னாள் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலக உதவியாளர் வேணுகோபால், என்பவருக்கு லஞ்சப்பணம் கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை தவறினால் ஆறு மாதம் சிறை தண்டளையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

மேற்படி வழக்கினை சக்திவேல் காவல் ஆய்வாளர், மற்றும் கண்காணிப்பு அவர்கள் திறம்பட சாட்சிகளை செய்து வழங்கியும், தரப்பு வழக்கறிஞராக சுரேஷ்குமார் அவர்கள் நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn