திருச்சி தேசியக் கல்லூரியில் முதுகலை உயிரியல் ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சிப்பட்டறை

திருச்சி தேசியக் கல்லூரியில் முதுகலை உயிரியல் ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சிப்பட்டறை

மேல்நிலைப் பள்ளி வகுப்புகளில் உயிரியல் பாடதிட்டத்தில் அண்மையில் (2019) புதிதாக சேர்க்கப்பட்ட உயிரித்தொழில்நுட்பத்துறை சார்ந்த பாடங்களுக்கான பயிற்சியை திருச்சி தேசியக்கல்லூரியின் உயிரித்தொழில்நுட்பம் மற்றும் நுண்ணுயிரியல் துறை சார்பில் ஏற்பாடு செய்திருந்த இந்த பயிற்சி பட்டறையில் திருச்சியை சார்ந்த பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை உயிரியல் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு, தேசியக்கல்லூரியின் உயிரித்தொழில்நுட்பம் மற்றும் நுன்னுயிரியல் துறை பேராசிரியர்களும் மாணவர்களும் இனைந்து துறைசார்ந்த ஆய்வக சோதனைகளை பங்குபெற்ற
ஆசிரியர்களுக்கு விளக்கினர். முன்னதாக, நிகழ்ச்சியை கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் டி, பிரசன்னா பாலாஜி தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார், பங்கேற்பாளர்கள் ஒரு நாள்  பட்டறையில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்களை துறைத்தலைவர் முனைவர் முகமது ஜாபிர் வழங்கினார். இந்தப்பயிற்சி பட்டறையில் DNA மூலக்கூறை பிரித்தெடுப்பது, gel electrophoresis செய்வது, நுண்ணியிரியை நுண்ணோக்கி மூலமாக ஆராய்வது,

அதன் நகர்வை கவனிப்பது, பாக்டீரியாக்களை ஆய்வுக்கூடத்தில் வளர்க்கும் முறைகளையும், தாவர திசு வளர்ப்பு முறைகளையும், Bioprocess technology முறைகளையும், நேரிடையாக மிகுந்த ஆர்வத்துடன் கற்றனர். பங்கு பெற்ற பள்ளி ஆசிரியர்கள் இந்த பயிற்சியை ஏற்பாடு செய்த உயிரித்தொழில்நுட்பம் மற்றும் நுண்ணுயிரியல் துறைக்கும் கல்லூரிக்கும் நன்றி கூறியதுடன் மேலும் அவர்கள் இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு இன்னும் மிகுந்த தெளிவுடன் பாடம் நடத்த முடியும் என்று தெரிவித்தனர். அனைத்து வசதிகளையும் கொண்ட தேசிய கல்லூரியின் உயிர்தொழில்நுட்பம் மற்றும் நுண்ணுயிரியல் துறை

மேலும் இது போன்ற பயிற்சிகளை அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் இன்னும் விரிவாக பயிற்சிப்பட்டறை நடத்தக்கோரி விண்ணப்பித்தனர். பொதுவாக மாணவர்களிடையேயும் பெற்றோரிடையேயும் இந்த தொழில்நுட்பம் மற்றும் நுண்ணுயிரியல் சார்ந்த வாய்ப்புகளும் தெளிவான சிந்தனையும் புரிதலும் இல்லாமல் இருப்பதால் இது போன்ற பயிற்சி வகுப்புகள் நல்ல ஒரு பாதையை அவர்களுக்கு காட்டும் என்று தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn