மக்கள் பள்ளி திட்டம் - திருச்சிக்கு தன்னார்வலர்கள் தேவை
அரசுப் பள்ளிகளில் மழலையர் முதல் எட்டு வரை பயிலும் குழந்தைகளுக்கான கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முன்னெடுக்கிறது 'மக்கள் பள்ளி திட்டம்'. மாணவர்கள் இருக்கும் இடங்களுக்கே நேரில் சென்று தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள், அரசு சாரா அமைப்புகள், இந்நாள், முந்நாள் ஆசிரியர்கள் உதவியுடன் கற்றல் கற்பித்தலில் இருக்கும் இடைவெளியை நிரப்ப செயல்திட்டம் உருவாக்கபட்டுள்ளது.
முன்னோட்ட திட்டமாக கடலூர், திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், நீலகிரி, விழுப்புரம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடங்கிட இருக்கிறது. அகரம் ஃபவுண்டேஷன் அமைப்பு இப்பணிகளில் தன்னார்வமாக ஈடுபட இருக்கிறது. மேற்காணும் மாவட்டங்களைச் சேர்ந்த, விருப்பமும், ஆர்வமும் உள்ள தனிநபர்கள், அமைப்புகள் பின்வரும் இணைப்பில் பதிவு செய்திட கேட்டுக் கொள்கிறோம். தகவல்கள் தொகுக்க பெற்ற பின், தங்களை தொடர்பு கொள்கிறோம்.
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கல்வி ஒளி பாய்ச்சும் 'மக்கள் பள்ளி' எனும் மகத்தான முன்னெடுப்பு நம் எதிர்கால சமூகத்திற்கானது. குழந்தைகளின் கல்விப் பணிக்காக ஒன்றிணைவோம் வாருங்கள். தன்னார்வலராக பதிவு செய்து கொள்வதற்கான இணைப்பு
https://forms.gle/v4MsJhS5uSyvvVP8A
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn