இலவச திறன் பயிற்சி திட்டத்தின் பட்டமளிப்பு விழா

இலவச திறன் பயிற்சி திட்டத்தின் பட்டமளிப்பு விழா

ஒமேகா சென்டர் ஆப் ஹோப், பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற இலவச திறன் பயிற்சி திட்டத்தின் நான்காவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. யுகேடி மலை வயலூர் பிரதான சாலை திருச்சிராப்பள்ளி, திட்ட பங்கேற்பாளர்களுக்கு TALLY, DTP, DATA ENTRY, BASIC COMPUTER மற்றும் GENERAL DUTY ASSISTANT என்று அழைக்கப்படும் செவிலியர் உதவி பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திறன்களில் பயிற்சி அளித்து வருகிறது.

குறுகிய கால பயிற்சியில் பயிற்சியை முடித்து வேலைக்கு சென்று கொண்டிருக்க கூடிய மாணவ மாணவிகளுக்கு பயிற்சிச் சான்றிதழ்களை வழங்குவதற்காக ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனத்தின் S.POORNIMA சீனியர் டைரக்டர் டெக்னிக்கல் ட்ரைனிங் ஆஃப் ஒமேகா ஹெல்த் கேர் மேனேஜ்மென்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் டேலண்ட் மேனேஜ்மென்ட் இயக்குனர் ANTONY EAPEN ஆகியோர் முதன்மை அதிகாரியாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

அதோடு ஆக்சிமம் பிசினஸ் சொலுஷன் நிறுவனத்தின் மனித வள மேலாளர் SYED SALIM BAASHA சீப் டெக்னிக்கல் ஆபிஸர், பத்ரா நர்சிங் ஹோம் மேனேஜ்மெண்ட் டைரக்டர் JESINTHA ஆகியோர் இந்த நிகழ்வில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டனர், இந்த பட்டமளிப்பு விழாவிற்கு ஹோப் தொண்டு நிறுவனத்தின் ரீஜியனல் டைரக்டர் MARIA JOSEPH கலந்து கொண்டார். இந்த திறன் பயிற்சி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட 245 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த பட்டமளிப்பு விழாவினை RITHIN JELTHIS மற்றும் GNANAPRAGASAM JEYARAJ ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மேலும் திருச்சியில் இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை நமது ஒமேகா சென்டர் கோப் திறன் பயிற்சி மையம் இலவசமாக வழங்கி கொண்டு வருகிறது. இந்தத் திட்டமானது கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு இன்று வரை சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வேலைக்குச் செல்ல உறுதுணையாக இருந்து வருகிறது. மேலும் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த சேவையானது முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பல மாணவ மாணவிகள் பங்கு பெற்று தேவைப்படும் திறமைகளை வளர்த்து கொண்டு வெவ்வேறு இடங்களில் வேலையில் அமர உதவியாக இருந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்த திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பால்வினை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்டோர், பாதுகாவலர்களின் மூலமாக வளர்க்கப்பட்டோர் ஆகியோர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து தங்கள் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்தி இந்த சமூகத்தில் நம்பிக்கையுடன் வாழ உறுதுணையாக இருந்து வருகிறோம்.

இத்திட்டத்தின் வெற்றிப் பயணமானது இத்தோடு முடியாமல் தொடர்ந்து கொண்டு செல்லும் வகையிலும் திருச்சியை சார்ந்த இளைஞர்களுக்கு புதிய சேவையை வழங்க முன்வந்து இந்த வருடம் ஜூன் மாதம் ஜெனரல் டியூட்டி அசிஸ்டன்ட் என்று சொல்லப்படும் நர்சிங் உதவி பயிற்சி மையத்தை தில்லை நகரில் தொடங்கப்பட்டு இன்று பட்டமளிப்பு விழாவிலேயே சான்றிதழ்களை பெறக்கூடிய வகையில் வழிகாட்டப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision