தென்னை வாரியம் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்க தலைவர் பேட்டி

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன்.... இந்த ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் பொழுது அதில் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும், மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்து அதை சட்டமாக்க வேண்டும்.
மேகதாதுவில் அணைக்கட்டினால் 12 மாவட்டங்கள் நேரடியாகவும், 12 மாவட்டங்கள் மறைமுகமாகவும் பாதிக்கப்படும். எனவே மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. இலவச மின்சாரத்திற்கு ஆபத்தை விளைவிக்க கூடிய புதிய மின்சார திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அதே போல நிலம் எடுப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இன்சூரன்ஸ் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தனி நபர் பயிர்காப்பீடு திட்டத்தை அறிவித்து செயல்படுத்த வேண்டும். விவசாயிகள் பயன்படுத்தும் கருவிகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
கும்பகோணத்திலிருந்து பெரம்பலூர் வழியாக சேலம் வரை பசுமை ரயில் போக்குவரத்தை கொண்டு வர வேண்டும். தென்னை வாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திலிருந்து அதிக வரி வசூல் செய்யும் மத்திய அரசு ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிதி ஒதுக்காமல் இருந்தால் அதற்கான விலையை 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவினர் அனுபவிப்பார்கள். மத்திய அரசு தமிழக மக்களையும் தமிழக விவசாயிகளையும் புறக்கணிக்க கூடாது.
விவசாயிகளுக்காக நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தி மத்திய அரசிடம் இருந்து நிவாரண நிதியை பெற்றுத்தர உதவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார் இந்த கூட்டத்தில் அந்த சங்கத்தை சார்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision