இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சியில் முப்பெரும் விழா!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சியில் முப்பெரும் விழா!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 96வது துவக்கநாள் மற்றும் தோழர் ஆர்.நல்லகண்ணுவின் 96வது நாள் பிறந்தநாள்விழா மற்றும் சுதந்திர போராட்டவீரர் KTK.தங்கமணி அவர்களின் 19ம்ஆண்டு நினைவுநாள் டிச 26ல் முப்பெரும் விழாவாக இந்திய கம்யூனிஸ் ட்கட்சி திருச்சி மாநகர் மாவட்டத்தில் 50இடங்களில் கொடியேற்றி சிறப்பாக நடைபெற்றது. 

Advertisement

மாநகர் மாவட்ட செயலாளர் திராவிடமணி, முன்னாள் செயலாளர்கள் க.சுரேஷ் மற்றும் எம்.செல்வராஜ், பொருளாளர் ஜான்பால், நிர்வாககுழு உறுப்பினர்கள் சிவா, அஞ்சுகம், பொன்னுதுரை, அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேற்குபகுதியில் செயலாளர் பாலமுரளி கிழக்கு பகுதியில் செயலாளர் அன்சர்தீன் திருவரங்கம் பகுதியில் செயலாளர் சண்முகம், மணிகன்டம் ஒன்றியத்தில் செயலாளர் செல்வகுமார், பொன்மலை பகுதியில் செயலாளர் சுந்தர்ராஜ், அபிசேகபுரத்தில் செயலாளர் பிரான்சிஸ் தலைமையில் அந்தந்த பகுதிகளில் கொடியேற்றுவிழாக்கள் நடைபெற்றது.

ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைவர் நடராஜா, முருகன், சுப்ரமணி மாதர்சம்மேன நிர்வாகிகள் புஷ்பம், ஆயிஷா மாணவர் பெருமன்ற செயலாளர் இப்ராகிம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO