இந்தியாவிலேயே முதல் முறையாக திருச்சி அருகே 15 ஏக்கரில் 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா!!

இந்தியாவிலேயே முதல் முறையாக திருச்சி அருகே 15 ஏக்கரில் 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா!!

திருச்சி மாவட்டம் இருங்களூர் ஊராட்சியில் இந்தியாவிலேயே முதல் முறையாக 15 ஏக்கரில் 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார்.

Advertisement

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றிய இருங்களூர் ஊராட்சியில் மழை ஈர்ப்பு தொடக்க விழாவாக மியாவாக்கி முறையில் 1.5 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட் தலைமையில் ஊர் முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை செய்து முடிவு செய்தனர். அதன்படி இருங்களூரில் உள்ள பெரிய ஏரியில் ஆங்கிலப் புத்தாண்டான நேற்று 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சிறியவர்கள், பெரியவர்கள் என அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து குறும்படம் ஒன்றை எடுத்து நேற்று அக்கிராமத்தில் உள்ள அனைவரின் செல்போனிற்கும் செல்ல ஏற்பாடு செய்தனர்.

Advertisement

மேலும் இந்த மரம் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார். லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் மலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், மதன், கிராம நிர்வாக அலுவலர் நடேசன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் என கலந்து கொண்டு மரம் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a