தகவல் அறியும் சட்டம் கீழ் அளித்த மனுவிற்கு அனுமதி தேதி முடிந்து கடிதம் அனுப்பிய வட்டாட்சியர் அலுவலகம் - பதிலளிக்காமல் அலைகழிப்பு

தகவல் அறியும் சட்டம் கீழ் அளித்த மனுவிற்கு அனுமதி தேதி முடிந்து கடிதம் அனுப்பிய வட்டாட்சியர் அலுவலகம் - பதிலளிக்காமல் அலைகழிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் 3 /149 மாதா கோவில் தெரு, நவலூர் குட்டப்பட்டு என்ற முகவரியில் வசிக்கும் யாகப்பன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் கிராம "அ" பதிவேடு முதல் புராதான சின்னங்கள் பதிவேடு வரை பார்வையிட்டு நகல் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்க கோரி கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி அன்று மனு அளித்திருந்தார்.

மனுதாரரின் மனு பரிசீலனை செய்யப்பட்டு அதில் மனுதாரர்கள் கூறப்பட்டுள்ள தகவல்களை பார்வையிடவும் நகலெடுக்கவும் அலுவலக வேலை நாட்களில் அரசு பணிக்கு குந்தகம் இன்றி தகவல் அறியும் உரிமை சட்டம்  பிரிவின் 5 பிரிவுகளின் 2(J) கீழ் ஜூலை 1ஆம் தேதி காலை 11 மணிக்கு மனுதாரருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாக ஸ்ரீரங்கம் பொது தகவல் அலுவலர் மற்றும் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

ஆனால் ஒன்றாம் தேதி அன்று அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடிதனமானது 9ஆம் தேதியன்று வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மனுதாரர்க்கு அனுப்பப்பட்டு கடந்த 10ஆம் தேதி அன்று அவருக்கு கிடைத்துள்ளது. இது குறித்து மனுதாரர் யாகப்பனின்  மகன் ஜூலியன்  கூறுகையில், சமூக அக்கறை கொண்டு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு அளித்தும் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்பாடுகளில் அரசு அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.

கடிதம் குறித்து அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் சரியாக அவர்கள் பதிலளிக்கவில்லை. மேலும் தொடர்ந்து முயற்சித்ததில் அவர்கள் அளித்தது தவறாக நடந்து விட்டது விட்டுவிடுங்கள் என்று பதிலளித்தார்கள். தவறாக தேதி குறிப்பிட்டு இருந்தாலும் அல்லது வேறு ஒரு தேதியை எங்களுக்கு தெரிவிப்பது குறித்த எவ்வித பதிலையும் எங்களுக்கு கூறவில்லை.

இதை அப்படியே விட்டு விடுங்கள் என்Qறு மட்டுமே கூறுகின்றனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் என்ன நிகழ்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக முயற்சிக்கும் முயற்சிகளில் கூட பொதுமக்களை இப்படி அலைக்கழித்தல் அரசு அதிகாரியின் மெத்தனப் போக்கையே வெளிப்படுத்துகிறது என்றார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0