கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் குண்டர் சட்டத்தில் கைது
கடந்த (05.11.2023)-ந்தேதி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளியம்மன் கோவில் தெருவில் தள்ளுவண்டியில் கொய்யாப்பழம் வியாபாரியிடம் மது அருந்த பணம் கேட்டு, கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி, ரூ.780/- பணத்தை பறித்துக்கொண்டும், மது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி பற்ற வைத்து தள்ளுவண்டி மீது விட்டு 3 நபர்கள் தப்பி சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் சிந்தாமணி வெனீஸ் தெருவை சேர்ந்த 1)அபிஷேக் (எ) அபி 2(0) த.பெ.மோகன் 2) சுபாஷ் 3) குரு ஆகியோர்களை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிரி அபிஷேக் (எ) அபி என்பவர் மீது கோட்டை காவல் நிலையத்தில் கத்தியை காட்டி பணம் பறித்ததாக 3 வழக்குகளும், அடிதடியில் ஈடுப்பட்டதாக 1 வழக்கு, பொருள்களை சேதப்படுத்தியதாக 1 வழக்கு, பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்தாக 1 வழக்கு உட்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக விசாரணையில் தெரியவருகிறது.
எனவே, எதிரி அபிஷேக் (எ) அபி என்பவர் தொடர்ந்து குற்றசெயல்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்டஎதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் கோட்டை காவல்ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகரகாவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியைகுண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.
அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீதுபிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்துசிறையில் அடைக்கப்பட்டார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision