திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் சிறுநீர் கழித்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு - குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் சிறுநீர் கழித்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு - குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருச்சி மாநகரம் பொன்மலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செந்தண்ணீர்புரம் அருகே கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி விடியற்காலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே தஞ்சாவூரைச் சேர்ந்த பாலாஜி(42) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.

Advertisement

ஜெயில்பேட்டை பாலக்கரை பகுதியை சேர்ந்த ஆந்தை என்கிற வினோத்குமார் (19) என்பவர் சிறுநீர் கழிக்கச் சென்ற பாலாஜியின் இடது பக்க விலாவில் கத்தியை வைத்து அழுத்தி வாதிக்கு மரண பயத்தை ஏற்படுத்தி பாக்கெட்டிலிருந்து பணம் கேட்டு பின்னர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து வினோத்குமார் பாலாஜியின் செல்போனையும் பர்ஸையும் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் பொன்மலை குற்றப்பிரிவு காவல் நிலைய படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பொன்மலை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் புலன் விசாரணை செய்து சம்பவத்தில் ஈடுபட்ட  ஆந்தை (எ) வினோத்குமார்(19) மோகன் ராஜ்(18) பிரி (எ) மன்சூர் அலி ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

Advertisement

இதில் ஆந்தை (எ) வினோத்குமார் என்பவருக்கு திருச்சி மாநகரத்தில் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும்,கே.கே.நகர். கோட்டை, பாலக்கரை மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கும் என ஏற்கனவே ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. எனவே ஆந்தை (எ) வினோத்குமார் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரியவருவதாலும் அவனது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் பொன்மலை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆணையின்படி ஆந்தை (எ) வினோத்குமார்  மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நேற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.