புதுக்கோட்டையில் இருந்து திரும்பிய முதல்வரை சந்திக்க எம்எல்ஏவுக்கு அனுமதி மறுப்பு!!

புதுக்கோட்டையில் இருந்து திரும்பிய முதல்வரை  சந்திக்க எம்எல்ஏவுக்கு அனுமதி மறுப்பு!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு விழாவிற்கு வருகை புரிந்தார்.காலை திருச்சி விமான நிலையம் வந்த அவர் விராலிமலை வழியாக இலுப்பூர் சென்று அப்படியே புதுக்கோட்டை அரசு விழாவில் கலந்து கொண்டு மீண்டும் புதுக்கோட்டையிலிருந்து கீரனூர் வழியாக திருச்சி வந்தார்.

Advertisement

அப்போது திருச்சி விமான நிலையத்தில், அமமுகவில் இருந்து அதிமுக வந்த, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதிக்கு முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் எம்எல்ஏ ரத்தினசபாபதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

Advertisement

இதுகுறித்து எம்எல்ஏ விடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு... "எல்லா எம்எல்ஏகளையும் அனுமதித்தார்கள். நான் தடுக்கப்பட்டேன். தற்போது எனது சிரிப்பை பதிலாக எடுத்துக் கொள்ளங்கள். உங்களின் கேள்விக்கு விரைவில் பதிலளிப்பேன். என்னை தடுத்து விட்டார்கள். நான் என்ன செய்ய நான் தடுக்கப்பட்டு நின்றேன். எல்லாம் எம்எல்ஏக்களையும் அனுமதித்தார்கள்" என்று கூறியவாறு அங்கிருந்து சென்றார்.