காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி 4 நாட்கள் கடையடைப்பு - கோவிந்தராஜுலு பேட்டி

காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி 4 நாட்கள் கடையடைப்பு - கோவிந்தராஜுலு பேட்டி

திருச்சியில் ஒரு முக்கிய பிரச்சனையாக காந்தி மார்க்கெட் - கள்ளிக்குடி மார்க்கெட் விவகாரம் உருவெடுத்துள்ளது. வியாபாரிகள் ஒருபுறம் காந்தி மார்க்கெட்டில் திறக்க வேண்டும் என்றும் மறுபுறம் சில வியாபாரிகள் கள்ளிக்குடி மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டும் என இருபுறமாக விவாதம் நடத்தி வருகின்றனர். 

Advertisement

கொரோனா ஊரடங்கு ஆரம்பமான காலகட்டத்தில் காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் பால் பண்ணைக்கு மாற்றப்பட்டது. பின் சமூக இடைவெளி கடைபிடிக்காததால் மீண்டும் ஜி கார்னர் பகுதிக்கு மொத்த வியாபாரம் மாற்றப்பட்டு இன்று வரை அங்குதான் வியாபாரம் நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில் இன்று திருச்சி காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறக்கக்கோரி வரும் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை தொடர் கடையடைப்பு போராட்டத்தை திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து வியாபார சங்கத் தலைவர் கோவிந்தராஜுலு பேட்டியில்..."காந்தி மார்க்கெட்டை கள்ளிக்குடி மார்க்கெட்டுக்கு மாற்றுவது தொடர்பாக தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்காக தீர்ப்பு வருகின்ற 28 ம் தேதி தீர்ப்பு வர உள்ளது. இதனால் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை தொடர் பொன்மலை ஜீ கார்னரில் செயல்பட்டு வரும் காய்கறி கடைகளை அடைத்து போராட்டம். 28 ஆம் தேதி காந்தி மார்க்கெட் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தீர்ப்பு வர இருப்பதால் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வர வேண்டும் என கோரிக்கை முன்வைத்து கடையடைப்பு போராட்டம். 28ஆம் தேதி தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை என்றால் தமிழகம் முழுவதும் வியாபாரிகளை அழைத்து காந்தி மார்க்கெட் முன்பாக போராட்டம் நடத்தப்படும். ஒரு தனிநபர் பேச்சைக் கேட்டு கள்ளிகுடி மார்க்கெட்டிற்கு காந்தி மார்க்கெட்டை கொண்டு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்".