பொது மக்களின் நீண்ட வருட கோரிக்கையான முக்கொம்பு முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா வரை பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்!!
திருச்சியின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக விளங்குவது முக்கொம்பு மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா. இங்கு தமிழகம் முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள்.
இந்நிலையில் முக்கொம்பிலிருந்து நேரடியாக வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு காவிரிக் கரையோரமாக சாலை அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.
முன்பு முக்கொம்பில் இருந்து வண்ணத்துப்பூச்சி பூங்கா செல்வதற்கு 30 கிலோ மீட்டர் தொலைவு சுற்றி வர வேண்டியதாக இருந்தது. இந்நிலையில் இந்த பால பணிகள் நடைபெற்று வருவதால் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே எளிதாக சுற்றுலா பயணிகள் வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு செல்லலாம் எனவே சுற்றுலா பயணிகளும் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
Advertisement
தமிழக பொதுப்பணித்துறை சார்பாக முக்கொம்பு முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா வரை பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் மே மாதம் பாதைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu