வீணாகும் மக்களின் வரிப்பணம் - கண்டுகொள்ளாத கார்ப்பரேஷன் அதிகாரிகள்!!
திருச்சியில் ரூபாய் 78 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்கா கட்டி முடித்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பும் திறக்கப்படாததால் உடனடியாக பூங்காவை திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட உய்யகொண்டான் எம்எம் நகரில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரூபாய் 78 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டது.
இதில் குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள், பெரியவர்கள் உடற்பயிற்சி கருவிகள் என பல்வேறு வசதிகள் உள்ளன.
இந்நிலையில் கட்டி முடித்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பும் பூங்கா திறக்கப்படவில்லை,
இந்நிலையில் பூங்காவை திறக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசு தரப்பிற்கு பல்வேறு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் 78 லட்சத்தில் பூங்கா அமைக்கப்பட்டது. கட்டி முடித்து இரண்டு ஆண்டுகள் ஆன பின்பும் பூங்கா திறக்கப்படவில்லை.
கருவிகள் அனைத்தும் மழையிலும், வெயிலிலும் துருப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
Advertisement
மேலும் கட்டுமானங்கள் சரியான முறையில் இல்லாததால் சுவர்கள் பெயர்ந்து விழுகிறது. எனவே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பூங்கா முழுவதும் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது என அச்சம் தெரிவிக்கும்.பொது மக்கள் உடனடியாக பூங்காவை திறக்க வேண்டும் என கூறுகின்றனர்.