திருச்சியில் 2 லட்சத்தை கடந்த கோவிட் டெஸ்ட்!

திருச்சியில் 2 லட்சத்தை கடந்த கோவிட் டெஸ்ட்!

உலகம் முழுவதையும் உலுக்கிய ஒரு நோய் கொரோனா. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா நோய்த்தொற்று ஆரம்பிக்கப்பட்டு 6 மாதங்களைக் கடந்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படிப்படியாக நோய் தொற்று குறைந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

Advertisement

திருச்சியை பொறுத்தவரை சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். தற்போது திருச்சியில் நாளொன்றுக்கு 60 க்கும் மேற்பட்டோர் மட்டுமே நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பண்டிகை காலம் வர இருப்பதால் பொது மக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

இந்நிலையில் மார்ச் மாதம் 23ம் தேதி ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எனப்படும் கோவிட் டெஸ்ட் திருச்சியில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி 1,00,000 ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எடுத்ததன் மூலம் திருச்சி மிளகுபாறை கி.ஆ.பெ விசுவநாதம் மருத்துவ கல்லூரியில் விழாவும் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இன்று வரை சுமார் 1,99,797 என்ற எண்ணிக்கையில் டெஸ்ட் எடுக்கப்பட்ட நிலையில் இன்று அரசு மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்டோர் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சியில் 2 லட்சம் பேருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது.