திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பார்க்கிங் கட்டணம் அறிமுகம்:

திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பார்க்கிங் கட்டணம் அறிமுகம்:

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாள்தோறும் 500 பேருந்துகளுக்கு மேலாக வந்து செல்லும் சத்திரம் பேருந்து நிலையம், 17 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில், ஒரே நேரத்தில் 30 பேருந்துகள் நிற்கும் வசதி, வணிக வளாகங்கள், வாகனங்கள் நிறுத்த சுரங்க தளம் ஆகியவை அமைக்கப்படுகின்றன. 2021ஆம் ஆண்டில் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் திருச்சிராப்பள்ளி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சத்திரம் பேருந்து நிலையத்திலும் மற்றும் திருச்சி தில்லைநகர், சாஸ்திரி ரோடு,என்.எஸ்.பி ரோடு, காந்தி மார்க்கெட், பெரியகடை வீதி, பறவைகள் சாலை, வில்லியம்ஸ் ரோடு, பாரதிதாசன் ரோடு, காட்டூர் ரோடு, மதுரை ரோடு மற்றும் 25 இடங்களில் தெருவோரங்களில் நிற்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இருசக்கர வாகனத்திற்கு 1 மணி நேரத்திற்கு 5 ரூபாயும் நான்கு சக்கர வாகனத்திற்கு 20 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வாகனம் நிறுத்துவதற்கான நிபந்தனைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒரு நாளைக்கு 2500 முதல் 5000 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது.