உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர் கூட்டம்

உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர் கூட்டம்

 திருச்சிராப்பள்ளி மாவட்டம் உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினம் (Global lodine Deficiency Disorders prevention Day) குறித்து விழிப்புணர்வு கூட்டம் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு, தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் அயோடின் உப்பு பயன்பாடு குறித்தும், உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும் உணவு பொருள்களில் கலப்படத்தை எளிதில் கண்டறிவது குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் சட்டமன்ற அறிவிப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட நியமன அலுவலர் அவர்கள் கூறுகையில் உணவு பொருள்களில் செயற்கை நிறமிகள் தவிர்ப்பது, சட்டமன்ற அறிவிப்புபடி நெகிழியில் உணவு பொட்டலமிடுவது, உணவு பொருள்களில் பொருள் விவரசீட்டு பற்றி எடுத்துரைத்தார். மேலும் அயோடின் பயன்பாடு பற்றி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அவர்களின் தொழில்நுட்ப உதவியாளர் திரு.மோகன் எடுத்துரைத்தார். இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் .டாக்டர்.S.வித்யாலெஷ்மி மற்றும் துணை முதல்வர் டாக்டர்.J.ராதிகா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் L.ஸ்டாலின் பிரபு, E.வசந்தன், மற்றும் T.சையத் இப்ராஹீம் ஆகியோர்கள் செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO