பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
MIET இன்ஜினியரிங் கல்லூரியின் NSS தன்னார்வலர்கள், எப்சா அறக்கட்ளை Environmental protection and social advancement (EPSA Charitable Trust), திருச்சி, அக்டோபர் 28, 2022 வெள்ளியன்று திருச்சியில் உள்ள நவல்பட்டு கிராமத்தில் உள்ள அண்ணா நகரில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க தூய்மை இந்தியா 2.0 இன் கீழ் தூய்மை இயக்கத்தை ஏற்பாடு செய்தனர்.
நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துக்கொண்டனர்.இதனைத்தொடர்ந்து அண்ணாநகர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர்.
எப்சா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் D எட்வர்ட் சகாயராஜ் மற்றும் எம்ஐஇடியின் என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் C ஜீவானந்தம் ஆகியோர் கிராமத்தில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை நவல்பட்டு கிராம ஊராட்சித் தலைவர் ஏ ஜேம்ஸிடம் ஒப்படைத்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO