அங்கீகாரம் பெறாமல் சேவை புரிந்து வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிறப்புப்பள்ளிகள் உடனடியாக பதிவு மேற்கொள்ள வேண்டும்

அங்கீகாரம் பெறாமல் சேவை புரிந்து வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிறப்புப்பள்ளிகள் உடனடியாக பதிவு மேற்கொள்ள வேண்டும்

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் (RPWD Act) 2016 பிரிவு 51ன்படி மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு, பாதுகாப்பு, கல்வி, பயிற்சி, மறுவாழ்வளித்தல் மற்றும் இதர செயல்பாட்டினை அளிப்பதே நிறுவனம் என வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தகைய நிறுவனத்தினை செயல்படுத்துவதற்கு மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் (RPWD Act) 2016 பிரிவு 51ன் கீழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகள் தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டம் 1973 விதிகள் 1974ன் கீழ் அங்கீகாரம் பெற்று செயல்பட வேண்டும். 

அதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நாளது வரை அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிறப்புப் பள்ளிகள் மேற்படி பதிவினை மேற்கொள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், நீதிமன்ற வளாக பின்புறம், கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி - 620001, தொலைபேசி எண் : 0431-2412590 என்ற அலுவலகத்தினை தொடர்பு கொண்டு உடனடியாக பதிவு மேற்கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn