கதை எழுதலாம் வாங்க - தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் அழைப்பு
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் ஸ்ரீரங்கநாதா நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 50 மாணவர்களுக்கு கதை எழுதும் பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை கீதா அனைவரையும் வரவேற்று பேசினார். ரோட்டேரியன் கே.சீனிவாசன் தனது சிறப்பு உரையில்..... கதைகள் குழந்தைகளுக்கு பல்வேறு உணர்ச்சிகளை அனுபவிக்க உதவுகின்றன. மகிழ்ச்சி, சோகம், கோபம், பயம் போன்ற உணர்ச்சிகளை கதாபாத்திரங்களுடன் இணைத்து புரிந்து கொள்ள உதவுகிறது என்றார்.
அந்தநல்லூர்ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் கா.மருதநாயகம் தனது தலைமை உரையில்..... தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளி திட்டத்தின் கீழ் மாபெரும் வாசிப்பு இயக்கத்தை தொடங்கியுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் கதைகளை உருவாக்கி மாணவர்களுக்கு வாசிப்பு திறனை மேம்படுத்த கதை உதவும் என்றார்.
50 மாணவர்களுக்கு கதை எழுதும் பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (ஓய்வு) சி.சிவகுமார் பயிற்சி அளித்தார். கதைகளை எவ்வாறு உருவாக்க வேண்டும். குழந்தையின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப 'நுழை,'80 முதல் 100 வார்த்தைகள், 'நட ' 150முதல் 250 வார்த்தைகள் ,'ஓடு' என்பது 300 முதல் 400 வார்த்தைகள், 'பற 'என்பது 400 முதல் 500 வார்த்தைகள் மிகாமல் நான்கு பிரிவுகளின் கீழ் கதைகளை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் உருவாக்கப்படும் கதைகள் 127 புத்தகங்களாக வடிவமைக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்றார். அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிகபட்சமாக ஐந்து கதைகளை அனுப்பலாம். சீராய குழு சிறந்த கதைகளை தேர்ந்தெடுக்கும்.
படைப்பாளியின் பெயர்புத்தகத்தின் மேல் அட்டையில் அச்சிடப்பட்டு வெளிவரும். EMIS login மூலமாக கதைகளை தட்டச்சு செய்து பெயரையும் முகவரியும் பதிவிட்டு (30.06.2024) பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றார். இறுதியில் ஆசிரியை பானுமதி நன்றியுரை கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision