ஏரியில் சிக்கிய நண்பர்களை காப்பாற்ற முயன்ற இளைஞர் பலி
திருச்சி மாவட்டம், காணக்கிளியநல்லூர் அருகே உள்ள சிறு வயலூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் சிவசக்தி (22). இவர் அதே பகுதியில் உள்ள பெரிய ஏரியில் நேற்று நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது நண்பர்கள் இரண்டு பேர் நீர் வீழ்ச்சியில் சிக்கியதை பார்த்த சிவசக்தி அவர்களை காப்பாற்றுவதற்காக அவரும் தண்ணீரில் குதித்துள்ளார். அப்போது திடீரென சுழலில் சிக்கிய சிவசக்தி தண்ணீருக்குள் அடித்துச் செல்லப்பட்டார்.
இதனை பார்த்து அவரது நண்பர்கள் சிவசக்தியை மீட்க முயன்றனர். இருப்பினும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர் தண்ணீரில் மூழ்கி மாயமானார். தகவலறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை வரை தேடியும் இளைஞர் கிடைக்காததால் தேடும் பணியை கைவிட்டு இன்று மீண்டும் தீயணைப்பு துறையினர் சிவசக்தியை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவசக்தியை சடலமாக தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision