முடிதிருத்தும் கடைகளை திறக்க அனுமதிக்கக் கோரி முடிதிருத்தும் தொழிலாளர்கள் மனு

முடிதிருத்தும் கடைகளை திறக்க அனுமதிக்கக் கோரி முடிதிருத்தும் தொழிலாளர்கள் மனு

கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்திருந்தது. இதில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் வணிக வளாகங்கள, திரையரங்குகள் செயல்பட தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில் முடி திருத்தும் கடைகள் செயல்பட அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்த மனுவில்.. திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 5000 கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து வருகிறார்கள். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே மனு கொடுத்தும் இதுவரை எந்த தகவலும் தமிழக அரசிடம் இருந்து வரவில்லை, எந்தவித உதவியும் கிடைக்கவில்லை.

ஆகவே எங்கள் கோரிக்கையை ஏற்று எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எங்கள் தொழிலை அரசு நெறிமுறைகளின் அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் அல்லது நிவாரணம் வழங்கும்படி கேட்டுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF