ஆசிரியர் தினத்தில் துக்கத்திலும் மரியாதை செய்த மாணவன் - பிரியாணி போட்ட ஆசான் நிகழ்வுகள்
ஆசிரியர் தினம் என்றாலே ஆசிரியர்கள் மீதான அன்பே மாணவர்கள் பரிமாறி கொள்வதும்,ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ள அன்பை வெளிப்படுத்தும் நாளாக அமைந்துள்ளது அப்படியான நாளில் நெகிழ்ச்சி மிக்க நிகழ்வுகள் நடந்துள்ளது.
திருச்சி அந்தநல்லூர் ஒன்றியம் கம்பரசம்பேட்டை காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று ஆசிரியர் தின விழா நடந்தது இதன் இடையே இப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் முகிலன் பாட்டி நேற்று இறந்து விட்டார்.
இதனால் துக்க நிகழ்வில் இருந்த முகிலனுக்கு திடீரென்று மாலை 3 மணிக்கு பள்ளியில் நடைபெற உள்ள ஆசிரியர் தின விழா நினைவுக்கு வந்தது உடனே சீருடை அணிந்து பள்ளிக்கு வந்தான் முகிலன் அப்போது விழாவில் தலைமை ஆசிரியர் பேசிக் கொண்டிருந்தார்அவர் பேசி முடித்தவுடன் மைக்கை வாங்கிய முகிலன் எனது முன்னேற்றத்திற்கு காரணமான ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் என தெரிவித்து தனது சூழ்நிலையை கூறிவிட்டு வீட்டிற்கு சென்றார். வீட்டில் துக்க நிகழ்வு ஏற்பட்ட நிலையில் பள்ளி மீதும்ஆசிரியர்கள் மீதும் அன்பும் மரியாதையும் வைத்து ஆசிரியர் தின விழாவில் கலந்து கொண்ட முகிலனை ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினர்கள் நெகிழ்ந்து பாராட்டினர்.
ஆசிரியர் மீதான அன்பே மாணவன் வெளிப்படுத்திய சம்பவத்தை போல் ஆசிரியர்கள் மாணவர்கள் மீதான அன்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி, மசால் முட்டை, அல்வா என அசைவ விருந்து அளித்த அசத்தி உள்ளனர்.
பள்ளி மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்களை அவர்களுக்கு உணவு பரிமாறி கவனித்துள்ளனர் மாணவர்களுக்கு அசைவ உணவே விரும்பி சாப்பிட்டனர்.
விருந்தில் 170 மாணவ, மாணவிகள். 30 பெற்றோர்கள் என 200 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் கூறுகையில் எங்கள் பள்ளியில் ஏழை எளிய குழந்தைகள் நிறைய பேர் உள்ளனர்.
அதனால் தான் அவர்களுக்கு பள்ளியில் தினமும் காலை உணவு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் எங்களுக்கு ஒரு கௌரவமான நாளான ஆசிரியர் தினத்தில் எங்களிடம் படிக்கும் குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் புதிய உணவு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து இந்த விருந்தை ஏற்பாடு செய்தோம் என்றார்.
ஆசிரியர்களின் இந்த அசைவ விருந்து மாணவ மாணவிகள் பெற்றோர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO