திருச்சி பெல் நிறுவனத்தில் 575 அப்ரண்டிஸ் காலியிடங்கள்

திருச்சி பெல் நிறுவனத்தில் 575 அப்ரண்டிஸ் காலியிடங்கள்

 தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.09.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited), தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, திருச்சி பெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 575 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 வயது தகுதி: 01.08.2022 அன்று 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகள் படி வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.mhrdnats.gov.in

/ என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் https://trichy.bhel.com/tms/app_pro/index.jsp

என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும் apprenticeshipindia.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO


#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO