திருச்சி மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது - மேயர் தகவல்.

திருச்சி மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது -  மேயர் தகவல்.

திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தெரிவித்ததாவது, வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மழையால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மக்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்த ஆலோசனை கூட்டத்தை தற்போது நடத்தி முடித்துள்ளோம்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பாதைகளை தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பணிகளின் விளைவாக கடந்த மூன்று நாட்களில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த மழையால் மாநகராட்சி பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மன் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் சற்று தேங்கி செல்கின்றது. அந்தப் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் உடனடியாக கடந்து செல்ல ஏதுவாக ராஜராஜன் நகர் பகுதி முதல் கிராப்பட்டி அன்பு நகர் வரை தூர்வாரப்பட்டுள்ளது.  

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சரின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீர் செய்யும் பணிகளும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் மழை நீர் வடிகால் பகுதிகளை தூர்வாரும் பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் எவ்வித பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்படவில்லை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மரம் அறுக்கும் இயந்திரங்கள் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் வகையில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் தண்ணீரை அப்புறப்படுத்தும் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

திருச்சி மாநகராட்சி இந்த மழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் தயார் நிலையில் உள்ளது குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை அருகில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்க தயாராக உள்ளோம். தண்ணீர் தேங்க கூடிய நோய் பரவக்கூடிய அனைத்து பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாநகராட்சி பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கும் டோபி காலனி, ராஜீவ் காந்தி நகர், ஆதிநகர், பாத்திமா நகர், ஏயுடி நகர், கிருஷ்ணாபுரம், R.M.S. காலாணி, கோரை ஆறு, சொசைட்டி காலனி, துளசிங்க நகர் ஆகிய இடங்களில் பெரிய வாய்க்கால் பகுதிலிருந்து தண்ணீர் வராமல் தடுக்க புதிதாக தடுப்பு சட்டர் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீரை உடனடியாக அகற்ற 20 எச்பி டீசல் மோட்டார் கொண்ட பம்பிங் ஸ்டேசன் அமைக்கப்பட்டு உள்ளன.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் உள்ள லாரன்ஸ் சாலை, ஐயப்பன் கோவில் அருகில் மழை நீர் அதிகமாக தேங்குவதை உடனடியாக வடிய வைப்பதற்காக வடிகால் வாய்க்காலில் மழை நீரை உறிஞ்சி வெளியேற்றுவதற்கு மோட்டார் ரூம் அமைப்பதற்குஅலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன்.

 

திருச்சி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 5 மண்டலங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் , ஆயில் இன்ஜினீகள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் சுகாதார பணிகளுக்கு புகை மருந்து அடிக்கும் இயந்திரம் ஆகியவை தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார்..

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision