பள்ளி மாணவர்களுக்கு பேரீச்சை சிரப்
இரும்பு சத்துக் குறைபாடு வராமல் தடுப்பதற்காக திருச்சியில் செயல்படும் லயன் டேட்ஸ் தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் மூலமாக ஒரு மாணவருக்கு 390 ரூபாய் மதிப்பிலான தலா 1 கிலோ பேரீச்சை சிரப் பாட்டில் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீரங்கம்ஸ்ரீ ரெங்கநாதா நகராட்சி பள்ளியில் இன்று நடைபெற்றது.
(2019 - 2021) இந்திய தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு அறிக்கையின் படி 25.0% ஆண்கள் 15 வயது முதல் 49 வயதுமுடிய உள்ளவர்களும் 57. 0% பெண்கள் 15 வயது முதல் 49 வயதுமுடிய உள்ளவர்களும் இரத்த சோகை உடையவர்களாக இந்திய அளவில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் 54.8% பெண்கள் 15 வயது முதல் 49 வயது முடிய உள்ளவர்களும் 50.4% ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளும் இரத்த சோகையோடு உள்ளனர். இதனைத் தவிர்க்க தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு பள்ளிகளில் சத்துணவு தற்போது காலைச் சிற்றுண்டி,வளரிளம் பெண்களுக்கு சிவப்பு அவல் என பல்வேறுமுன்னெடுப்புகளை மேற்கொண்டு தமிழகத்தின் குழந்தைகள் இரத்தசோகையின்றி வலுவாக உருவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இருப்பினும் பெற்றோர்களும்தனியார் நிறுவனங்களும் இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு குழந்தைகளை வலிமையானவர்களாக மாற்ற முயன்று வருகின்றனர். இன்று திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியம்,திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, ஸ்ரீரங்கம் கோட்டத்திற்குட்பட்ட நகராட்சி தொடக்க / நடுநிலை / உயர்நிலைப் பள்ளிப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் (31.10.2023) காலை 9.00 மணிக்கு LION Dates நிறுவனத்தின் மூலம் ஒரு கிலோ எடையும் 390 ரூபாய் மதிப்பும் உள்ள Lion Dates Syrub வழங்கப்பட்டது.
முதலாவதாக ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதா நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் வைத்தியநாதன் கோட்டத் தலைவர் ஆண்டாள் ராம்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இராதா, செல்வி மணி, Lion Dates நிறுவன பொறியாளர் சிவா ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து நகராட்சி பள்ளிகளுக்கும் வாகனம் மூலமாக நேரடியாக 3000 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நேரடியாக வழங்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision