நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 61வது வார்டு காட்டூர் காவிரி நகரில், ரூபாய் 16.25 லட்சம் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பொது நியாய விலைக் கடையினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  இன்று (12.09.2021) திறந்து வைத்தார்.

பின்னர் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில்.... பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பு மாணவர்கள் வருகை, கொரோனா உள்ளிட்டவை குறித்து கண்காணித்து வருகிறோம்.

அது குறித்து வரும் 15ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்பு தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பது  குறித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார். நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தில் உள்ளன. நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn