திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் ஆய்வு
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இன்று 12.09.2021 மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் சுமார் 650 தடுப்பூசி முகாம்கள் நடத்தி 1,37,500 மக்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, கி.ஆ.பெ.விசுவநாதம்
மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதே போல் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, காட்டூர் பாப்பாக்குறிச்சி புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி மாவட்டத்தில் நடைபெறுகின்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை கண்காணிப்பதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட
கண்காணிப்பாளர் மற்றும் அருங்காட்சியக இயக்குநருமான எஸ்.ஏ.ராமன் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள மாநகராட்சி நடு நிலைப்பள்ளியிலும், திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூர் மினி
கிளினிக்கிலும் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் நகர்ப்புற பகுதியிலும், ஊரகப்பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள 623 முகாம்கள் 11 அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் மற்றும் அவற்றிற்கு அனுப்பப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகள் முகாமில் உள்ள மருத்துவர்கள்,
செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட விவரங்களையும், இம்முகாமில்
கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்படுவதையும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், நகராட்சி நிர்வாக இயக்குநரக மேற்பார்வைப் பொறியாளர் திருமாவளவன், இணை
இயக்குநர் (நலப்பணிகள்) டாக்டர் சு.லெட்சுமி, துணை இயக்குநர்
(சுகாதாரப்பணிகள்) டாக்டர்.ஆ.சுப்ரமணி, முன்னாள் துணை மேயர் மு.அன்பழகன், மாவட்டப் பிரமுகர் வைரமணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn