மணப்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் பிறந்து 20 நாட்களான பெண் குழந்தை - பரபரப்பு.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் தளத்தில் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று பிற்பகல் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு கட்டிடத்தின் பின்புறம் குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது.கீழே இறங்கி வந்து பார்த்தபோது ஒரு துண்டு மேல் கிடந்த குழந்தை அழுது கொண்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு கட்டிட தொழிலாளர்கள் அளித்த தகவலின்பேரில் மருத்துவமனை பணியாளர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக தீவிர சிசு சிகிச்சை பிரிவில் அனுமதித்து உள்ளனர். அனாதையாக கிடந்தது பெண் குழந்தை எனவும் பிறந்து சில நாட்களே ஆவதாகவும் மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டிடத்தில் அனாதையாக பெண் குழந்தையை போட்டுச் சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn