தனியார் வேலை வாய்ப்பு முகாம் - 376 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
திருச்சிராப்பள்ளி தந்தை பெரியார் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இன்று (31.08.2024) நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் கலந்து கொண்டு தேர்வு பெற்ற பணிநாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார்.
இன்று நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், பெல் நிறுவனம், ஐ.டி.சி நிறுவனம், டி.வி.எஸ். ரானே பிரேக்ஸ், டைம்ஸ் ப்ரோ, ரிலைன்ஸ் நிப்பான், ஆனந்த் இன்ஜினியரிங், சிவா ஆட்டோ மொபைல்ஸ் உள்ளிட்ட 105 தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை நேர்காணல் செய்து பணிக்கு தேர்வு செய்தனர்.
இம்முகாமில், படித்த, வேலை வாய்ப்பற்ற 211 ஆண்கள் மற்றும் 165 பெண்கள் என மொத்தம் 376 வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை பெற்றனர். இதில் 105 தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு நேர்காணல் நடத்தினர்.
இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுரேஷ், மாநில திட்ட மேலாளர் குமரன், கல்லூரி முதல்வர் வாசுதேவன் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision