சிதிலமடைந்த சாலைகளில் மாநகராட்சி கவுன்சிலர் படுத்து உருண்டு போராட்டம்.

சிதிலமடைந்த சாலைகளில் மாநகராட்சி கவுன்சிலர் படுத்து உருண்டு போராட்டம்.

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரியமங்கலம் உக்கடை பகுதியில் தொழிற்சாலைகள் குடோன்கள், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், பள்ளிகள் உள்ளன. மேலும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் இருபுறமும் வந்து செல்வதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த சுரங்கப்பாதையானது முறையாக பராமரிப்பின்றி சாலைகள் இருப்பதால் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கைகள் வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் இந்த பகுதியில் பாதாள சாக்கடைகளுக்கான சாலைகள் தோண்டப்பட்ட நிலையில அதனையும் சீரமைக்காமல் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியம் காட்டி வருவதாக வருவதாக பொதுமக்கள் குற்றம் சாற்றினர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் தலைமையில் தெற்கு உக்கடை செல்லும் சுரங்க பாதையில் படுத்து உருளும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலை துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் சுரங்க பாதையில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பின்னர் தேசிய நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பு பொறியாளர் ராஜ்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் ஒரு வார காலத்தில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இறுதியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியபடி சாலைகளை சீரமைக்காவிடில் மக்களை ஒன்று திரட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision