பஞ்சபூரில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணியை பொறியாளர்களுடன் மேயர் ஆய்வு.

பஞ்சபூரில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணியை பொறியாளர்களுடன் மேயர் ஆய்வு.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பஞ்சபூரில் புதிய நவீன தொழில்நுட்ப முறையில் (SBR Technology) 100 MLD கொள்ளளவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 50 வார்டு (வார்டு எண் : 1.2.3.4.5.6.7.8.9.10.11.12.13.14. 15,16,17,18,19,20,21,22,23,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,42,43, 44,48,49,50,51,52,53,54, 59) ஆகிய பகுதிகளில் வாழும் பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.

இத்திட்டப்பணி 2026-ம் ஆண்டு முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மேயர் மு. அன்பழகன் தெரிவித்தார். இந்த ஆய்வில் செயற்பொறியாளர் கே.எஸ். பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் துர்கா தேவி, உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், மண்டல தலைவர் துர்கா தேவி, செயற்பொறியாளர் கே.எஸ்.பாலசுப்பிரமணியன் உதவி பொறியாளர் வேல்முருகன் மற்றும் மாமன்ற உறுப்பினர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision