அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி செயலாளர் ரபீக் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டுமனை அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு மனு கொடுத்தனர்.

கட்சி சார்பாக உறையூர் செட்டி தெருவில் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற கோரியும், பாண்டமங்கலத்தில் குடிநீர் குழாயில் தண்ணீர் வருவதில்லை, பழுதடைந்த குடிநீர் பைப்புகளை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டது. இதில் பாண்டமங்கலம் கிளைச் செயலாளர் சுப்பிரமணி பகுதி குழு உறுப்பினர் ஆட்சிக்கலி கலந்து கொண்டனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision