உலக நுகர்வோர் உரிமைகள் தினம்- நுகர்வோர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உரிமைகள்

உலக நுகர்வோர் உரிமைகள்  தினம்- நுகர்வோர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உரிமைகள்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் (World Consumer Rights Day) ஆக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 15 ஆம் தேதியை தேசிய நுகர்வோர் உரிமைகள் நாளாகப் (National consumer rights day) பிரகடனப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் 1962 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கியமான ஒன்றாகும். அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் கணிக்கப்படுகின்றது.

அதே வேளை நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாகக் கரிசனை காட்டிய முதலாவது நாட்டுத் தலைவராகவும் ஜோன். எப். கென்னடி கணிக்கப்படுகின்றார். அதனை நினைவு கூறும் விதமாக 1962 ஆம் ஆண்டு, ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 15 ஆம் திகதியை உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக பிரகடனப்படுத்தி அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1963 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக அனுசரிக்கபப்டுகிறது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் பாதிக்கப்படும் பயனாளிகள் விரைவாக தீர்வு காண நுகர்வோர் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதனை மக்கள் தெரிந்துகொள்ளவும், பயன்படுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாடு முழுவதும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.

நுகர்வோருக்கு இந்தியாவில் இருக்கும் உரிமைகள் என்னென்ன என்பதைக் காணலாம்.

பாதுகாப்பு உரிமை : நுகர்வோர் தான் வாங்கும் பொருட்கள் எந்த அளவு பாதுகாப்பனது என்பதைத் தெரிந்துகொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார். உதாரணமாக மின்சாதனப் பொருட்களை வாங்கும்போது அதில் பாதிப்புகள் இருக்கிறதா, பழுதுகள் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவேலை அது சரியாக இல்லை என்றாலும் கேள்வி கேட்கும் உரிமை நுகர்வோருக்கு உண்டு. அதேபோல் தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்றாலும் கேள்வி கேட்கலாம். நல்ல பொருளைப் பெற்றுக்கொள்ளவும் உரிமை உண்டு.

பொருட்களை தேர்ந்தெடுக்கும் உரிமை : தனது தேவைக்கு, விருப்பத்திற்கு ஏற்ப பொருட்களை தேர்வு செய்யும் உரிமை நுகர்வோருக்கு உண்டு. அதுவும் நியாயமான , நிர்ணயித்த விலையில் வாங்கும் உரிமை உண்டு. இந்தப் பொருளைதான் வாங்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது.

நுகர்வோர் தனது உரிமையை அறிந்துகொள்ளும் உரிமை : நுகர்வோர்கள் பலருக்கும் அவர்களுக்காக இயற்றப்பட்டிருக்கும் சட்டங்கள் மற்றும் உரிமைகள் பற்றித் தெரிவதில்லை. அவர்களுக்கு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உரிமை உண்டு. நுகர்வோருக்கு அந்தப் பொருள் சரி, தவறு என சுட்டிக்காட்டவும், போலிகளை நம்பி ஏமாறாதீர்கள் என்றும் ஒரு நுகர்வோரை எச்சரிக்கவும் உரிமை உண்டு.

தகவல் பெறும் உரிமை : நுகர்வோர் ஒரு பொருளை வாங்குகிறார் என்றால் அந்த பொருள் குறித்த விளக்கத்தை அளிக்கக் கூடிய கடமை விற்பனையாளருக்கு உண்டு. நுகர்வோர், வாங்கும் பொருள் குறித்த எந்தக் கேள்விகளைக் கேட்டாலும் அதற்கு பதில் அளிக்கவும் அந்நிறுவனம் கடமைப்பட்டிருக்கிறது.

பொருட்களை வாங்கியதால் திருப்தி பெரும் உரிமை : நுகர்வோர் தான் வாங்கிய பொருளால் முழு திருப்தி பெற வேண்டும். அவ்வாறு இல்லை எனில் அவர்களின் வேலைபாடுகள் குறித்து உடனடியாகக் கேள்வி எழுப்பலாம். உதாரணமாக ஹோட்டலில் சுத்தமான முறையில் உணவு இல்லை, சுகாதாரமற்ற சுற்றுச் சூழல், சுத்தமில்லா உணவு என சமைத்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறார்கள் என்றால் அதுகுறித்து நுகர்வோர் கேள்வி எழுப்பலாம்.

புகார் அளிக்கும் உரிமை : நுகர்வோர் தான் வாங்கிய பொருளில் அந்நிறுவனம் கூறியதற்கு மாறாக இருந்தால் உடனடியாகக் அதுகுறித்த புகாரை கூறலாம். அதை அந்நிறுவனமும் கேட்கவேண்டும். அலட்சியப்படுத்தக் கூடாது. பின் நுகர்வோருக்கு அந்தப் பொருளை வங்கியதால் ஏற்பட்ட நட்டத்தை அந்நிறுவனம் ஈடு செய்ய வேண்டும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO